திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய மூன்றாம் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, திருப்பூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு உழவாரப்பணியினர் தங்கக் கொடி மரம் மற்றும் பலிபீடம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.