சதுரகிரியில் தொடரும் மழை; பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2023 11:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாடுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தினமும் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சதுரகிரி மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வழுக்குப் பாறை, மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஆகிய ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாடுகளுக்கு கோவிலுக்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.