பதிவு செய்த நாள்
09
நவ
2023
11:11
கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் கோவிலில், தேவதை படம் வரையப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார், ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்.
அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சியில் ஹிந்து சமய அறநிலையத் துறை, அலங்கோலத் துறையாக மாறி விட்டது என்பதற்கு, சமீபத்திய உதாரணம், கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வரையப்பட்டிருக்கும் படங்கள். திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றாகக் குறிப்பிடப்படும் திருகண்ணபுரம் கோவிலில், தற்போது புனரமைப்பு பணி நடக்கிறது. அதையொட்டி, கோவில் மேற்கூரையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் புதுப்பிக்கின்றனர். ஹிந்து கோவில் அடையாளங்கள் குறித்து எதுவுமே தெரியாத ஓவியர், கிறிஸ்துவ ஏஞ்சல் ஓவியங்களை அங்கு வரைந்து இருக்கிறார். திருக்கண்ணபுரம் கோவில் மேற்கூரை ஓவியம், கிறிஸ்துவ தேவதையைப் போல இருப்பதால், அதை உடனடியாக சீர்படுத்த வேண்டும். அறநிலையத் துறை அதிகாரிகள் சரி செய்யவில்லை என்றால், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -