சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2023 10:11
சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத இறுதிநாளில் நடைதிறக்கப்படுவது வழக்கம். இதுதவிர பங்குனி உத்திரம், சித்திரை விஷூ, பிரதிஷ்டை தினம், திருவோணம் போன்ற சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருவாங்கூர் மகாராஜாவின் பிறந்த நாளுக்காக ஐப்பசியில் ஒருநாள் நடைதிறக்கப்படுவது வழக்கம். இது சித்திரை ஆட்ட திருநாள் என்று வழங்கப்படுகிறது. அதன்படி நாளை நவ., 11ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (நவ.10) திறக்கப்படுகிறது. நாளை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவு 10 மணிக்கு ஹரிஹராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் மண்டல பூஜைக்காக இம்மாதம் 16ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.