அயோத்தியில் 22 லட்சம் விளக்கு ஏற்றி சாதனை; தீப ஒளியில் ஜொலித்தது சரயு நதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2023 01:11
அயோத்தி: அயோத்தியில் தீப உற்சவ விழாவில் 22 லட்சம் விளக்கு ஏற்றி சாதனை. தீப ஒளியில் ஜொலித்தது சரயு நதி.
அயோத்தியில், கடந்த 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமர்சையாகி நடந்து வருகிறது. அப்போது, நகரில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ல் 3.01 லட்சம் தீபங்களும், 2019ல் 4.04 லட்சம் லட்சம் தீபங்களும், 2020 ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், 2022ல் 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு, ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளதால், உலக சாதனை படைக்க 24 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டது. ராமர் கோயில் சுற்று பகுதிகளில் 51 இடங்களில் ஏற்றப்பட்டது. தீப ஒளியில் ஜொலித்தது சரயு நதி.