திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2023 05:11
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு முக்கிய இடங்களில் சனிப்பெயர்ச்சி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பிரசித்திபெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிசன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனிஸ்வரபகவான் அருள்பலித்து வருகிறார் இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பலர் பகவானை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழா வரும் (20.12.2023) புதன்கிழமை மாலை.5.20மணிக்கு மகரராசியிலிருந்து கும்பராசிக்கு பிரவிசிக்கிறார். இதனால் சனிப்பெயர்ச்சிவிழா முதல்கட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.விழா ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் கூறுகையில். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தங்கும் வசதிகள்,சுத்தமான உண்வுகள் மற்றும் குடிநீர் வழங்குவது. எவ்வித தடையின்றி சிறப்பு தரிசனம் செய்வது.மேலும் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கார் பார்க்கிங் வசதி கோயில்களை சுற்றி மூன்று கிலோமீட்டர் அளவிற்கு சாலைகளை பரமாறிப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் சனிப்பெயர்ச்சியை யொட்டி முக்கிய இடங்களில் விழா நடைபெறும் பேனர்கள் வைக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் எவ்வித சிரம் இல்லாமல் தரிசம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.