பழநி: பழநி, கோதை மங்கலத்தில், மானூர் சுவாமிகளின் 79 ஆம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.
பழநி, கோதைமங்கலத்தில் மானூர் சுவாமிகள் கோயில் உள்ளது. இங்கு சுவாமிகளின் 79 ஆம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது. காலையில் அகவல் பாராயணம் நடைபெற்று அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. மானூர் சுவாமிகளின் பாதபீடம் மலர்களால் அலங்கரித்து வழிபட்டனர். மானூர் சுவாமிகளின் சிலைக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. குரு பூஜைக்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (நவ.13) மறுபூஜை, அன்னதானம் நடைபெற உள்ளது.