கந்த சஷ்டி திருவிழா; பக்தர்கள் இடம் பிடிக்க போட்டா போட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2023 10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் இன்று (நவ.13) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.
அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர் வள்ளி தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9:00 மணிக்கு மேல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழா நடைபெறும் நாட்களில் கோயில் மண்டபங்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்வர். இதற்காக நேற்று முன் தினம் முதல் கோயில் மண்டபங்களில் பக்தர்கள் போர்வை விரித்தும், சாக் பீஸ்களால் தங்களது பெயர், ஊரின் பெயர் எழுதி இடம் பிடித்து வருகின்றனர். மதுரை சுற்றுபுற பகுதிகள் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் தீபாவளியை கொண்டாடி முடித்த பின்பு நேற்று காலை கோயிலில் தங்கினர்.