தினமும் ஒரு சாஸ்தா- 4; நீலோற்பவ மலர் ஏந்திய சாஸ்தா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2023 03:11
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் இடம் பெறுகிறது.
கோயம்புத்துார் குறிச்சி குளம் கரையருகே பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ளது ஹரிஹரபுத்ரஅய்யனார் கோயில். சாத்துாரை பூர்வீகமாககொண்ட மாரியப்பன் என்பவர் சிறுவயதில் இருந்தே தெய்வபக்தி உடையவர். தொழில் நிமித்தமாக இங்கு வந்தஇவருக்கு உண்மைஞானம் ஏற்படவேமக்களுக்கு தேவையான தொண்டுகளை செய்தார். ஒரு நாள் இவரது கனவில், கோயில் எழுப்பி வழிபாடு செய்என சொல்லி மறைந்தார் சாஸ்தா. பின்னர் அவரும் கோயில் கட்ட பல ஊர்களுக்கு சென்று இடம் தேடிய போது இடம் தேர்வாகவில்லை. இப்பகுதிக்கு வந்தஅவர் இங்கு கோயில் கொண்டுள்ள காளியம்மனிடம் தன் கோரிக்கையை விண்ணப்பித்தார். அன்றே‘என் அருகில் இடமுள்ளதே’ என்று உத்தரவு கொடுத்தாள். அதன்படி அவரால் உருவாக்கப்பட்ட கோயில் தான் இது. கருவறையில் பூர்ணாபுஷ்கலையுடன் ஹரிஹரபுத்திர தர்மசாஸ்தா மூவருமே கையில் நீலோத்பவ மலர் ஏந்தி அருள்பாலிக்கிறார்.
இம்மலர் வெற்றியின் அம்சம். ஒவ்வொரு சிவராத்திரி தோறும் தேவர்களும் சித்தர்களும் இங்கு வந்து அய்யனாரை வழிபட்டு செல்கிறார்கள் என்று வைத்தீஸ்வரன் கோயில் ஏட்டில் உள்ளது. இங்கு தரப்படும் மூலிகை தீர்த்தம் பக்தர்களின் நோய்க்கு அருமருந்து. மஹாசிவராத்திரி அன்று பல கோயில்களுக்கு இக்கோயில் உதவியுடன் அன்னதானம் நடைபெறுகிறது. கால பைரவருக்கு சன்னதி உள்ளது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை இக்கோயில் மனமுவந்து செய்கிறது.
கோயம்புத்துார் காந்திபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ.,
நேரம்: காலை7:00 - 11:00 மணி மாலை5:00 - 8:00 மணி தொடர்புக்கு: 94427 75899, 94868 75899