அருணாச்சலனே ஈசனே; மகா தீபத்திற்கு ராட்சத கொப்பரை தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2023 04:11
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில், பத்தாம் நாளில் 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பயன்படுத்தும் ராட்சத கொப்பரை தயார் நிலையில் உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாள் இரவு உற்சவத்தில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர், பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதரா அண்ணாமலையார், வெள்ளி ரிஷபம் வாகனத்தில் பராசக்தி, வெள்ளி ரிஷபம் வாகனத்தில் சண்டிகேஸ்வரர், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் அதிகாலை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரோடும் வீதியான மாட வீதி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில், மின்விளக்கு பொருத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பழங்கால வடிவமைப்பில் மின்விளக்கு இருப்பதால் அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.