வடக்கு வாசல் செல்லியம்மன் கோயிலில் கொழுக்கட்டை செவ்வாய் உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2023 02:11
சாயல்குடி: சாயல்குடி அருகே பிள்ளையார் குளத்தில் பழமையான வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய் உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று இரவில் மூலவர் வடக்கு வாசல் செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பெண்கள் கொழுக்கட்டை அவித்து அம்மனுக்கு படையல் வைத்து பூஜை செய்தனர். ஏராளமான நாட்டுக்கோழிகள் மற்றும் முட்டை ஆகியவற்றை சமைத்து அசைவ பிரசாதத்தினை பக்தர்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை பிள்ளையார்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.