பதிவு செய்த நாள்
24
நவ
2023
08:11
மேற்கு மாம்பலம், ஸ்ரீ சங்கர மடத்தில், 108 நாட்கள் நடைபெறும் ஸ்ரீ மஹா சண்டி ஹோமம், 19ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தில், ஸ்ரீ காமாட்சி மண்டலி டிரஸ்ட் சார்பில், 108 நாட்கள் நடைபெறும் ஸ்ரீ மஹா சண்டி ஹோமம் கடந்த 19ம் தேதி விமரிசையாக துவங்கியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வரை நடைபெறும் இந்த மஹா சண்டி ஹோமத்தில், தினமும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை கணபதி பூஜை, புண்யாகவசனம், சங்கல்பம், கலசபூஜா ஆவாஹனம், சண்டி பாராயணம், ஜபம், ஹோமம், சுவாஸினி பூஜை பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்று வருகின்றன. நிறைவாக தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது.