Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 350 கிலோ மஞ்சள் மாலை அலங்காரத்தில் ... தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; வீடு வீடாக அட்சதை வழங்கி அழைக்கிறது வி.எச்.பி.,
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; வீடு வீடாக அட்சதை வழங்கி அழைக்கிறது வி.எச்.பி.,

பதிவு செய்த நாள்

29 நவ
2023
12:11

சென்னை: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி, 22-ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான அழைப்பிதழ்களை ஜனவரி 1 முதல் 15ம் தேதி வரை நாடு முழுதும் வீடு வீடாகச் சென்று வழங்க விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற, வி.எச்.பி., அமைப்பு முடிவு செய்துள்ளது.

அயோத்தி குழந்தை ராமர் கோயிலில் பூஜிக்கப்பட்ட அட்சதை கலசத்திற்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா கலாசார மையத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து அட்சதை அடங்கிய கலசங்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டன. சின்மயா மிஷன் துறவி சுவாமி மித்ரானந்தா, சுவாமி யுக்தேஸ்வர் விஸ்வலிங்கர், வாதவூர் அடிகளார் ஆகியோர் அட்சதை கலசங்களை வி.எச்.பி., மாவட்ட செயலர்களிடம் வழங்கினர்.

இது தொடர்பாக, வி.எச்.பி., மாநில அமைப்பாளர் ராமன் கூறியதாவது: அயோத்தியில் உள்ள குழந்தை ராமருக்கு பூஜை செய்யப்பட்ட அட்சதை, ராமர் படம், கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு நேரில் வழங்க இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், சமுதாய அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், ராம பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர், ஜனவரி 1 முதல் 15-ம் தேதி வரை இந்தப் பணிகளில் ஈடுபடுவர். பல நுாற்றாண்டுகள் நடந்த போராட்டத்திற்கு பின் சுமூகமான முடிவு எட்டப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்களின் கனவு நனவாகியுள்ளது. இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்து குழந்தை ராமரை தரிசிக்க அழைப்பு விடுக்கவே வீடு வீடாகச் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar