பதிவு செய்த நாள்
04
டிச
2023
11:12
ராமேஸ்வரம் : உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. வரும், 2024 ஜன., 22ல் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவில் கும்பாபிஷேகத்திற்கு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, 22 புனித தீர்த்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 51 புனித தீர்த்தங்களை, வி.எச்.பி., நிர்வாகிகள் கலசத்தில் சேகரித்தனர். ராமேஸ்வரம் விவேகானந்தா பள்ளியில் நேற்று புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின், புனித நீருடன், ரத வீதியில் ஊர்வலமாக சென்று, அயோத்தி ராமர் கோவிலுக்கு கிளம்பினர். இதில், பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன், பார்வையாளர்முரளிதரன், பொதுச் செயலர் நாகேந்திரன், வி.எச்.பி., மாவட்ட தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.