பழநி; பழநி கோயிலுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பக்தர் மினி பஸ் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
பழநி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூரிலிருந்து வருகை புரிகின்றனர். இங்கு பக்தர்கள் பல விதமான நேர்த்திக்கடன்கள் செய்து வருகின்றனர். நிலையில் இன்று திண்டுக்கல் சேர்ந்த பக்தர் ஒருவர் பழநி கோயிலுக்கு மினி பஸ் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். பாத விநாயகர் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து பஸ்ஸை கோயில் இணை கமிஷனர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தார். பத்து ரூபாய் கட்டணத்தில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அடிவாரப் பகுதிகளில் உள்ள பக்தர்களை இந்த பஸ் மூலம் கோயிலுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். நிகழ்வில் கோயில் துணை கமிஷனர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.