வடமதுரை; வடமதுரை மேற்கு ரதவீதி முனியாண்டி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கிய பிரதான கலச பூஜை, மகாபூர்ணாகுதி உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடந்தன. ராமேஸ்வரம், திருசெந்துார், பிள்ளையார்பட்டி, கொடுமுடி, சுருளி ஆகிய புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், பால் உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.