பதிவு செய்த நாள்
10
டிச
2023
03:12
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், ஞானானந்தா நிகேதனில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசக முற்றோதல் நடந்தது.
திருக்கோவிலூர், தபோவனத்தில் உள்ள ஞானானந்தா நிகேதன் சச்சங்க மண்டபத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட நால்வருடன் அம்பாள் சமேத சிவபெருமான், முருகர் அருள் பாலிக்கும் அற்புதக் காட்சி ஆவாகனம் செய்யப்பட்டு திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேள்வி காலை 9:00 மணிக்கு துவங்கியது.
தபோவனம் பிரபவானந்த சரஸ்வதி சுவாமிகள், சதாசிவகிரி சுவாமிகள் தலைமை தாங்கினர். ராமானந்தகிரி சுவாமிகள், தேனி சமாநந்த சரஸ்வதி சுவாமிகள், மதுரை அம்ருதேச்வரானந்த சுவாமிகள், ஞானமயானந்தா சுவாமிகள் முன்னிலை வகித்தனர். ஞானானந்தா நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர் பரமேஸ்வரன் மற்றும் சென்னை சீனிவாசன், பெங்களூரு வெங்கடசுப்ரமணியன் மற்றும் பக்தர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். திருச்சி திரிசிரபுரம் சிவனடியார்கள் குழு, சென்னை கிழக்கு தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம், ஆற்காடு சோமவார வழிபாட்டு அன்பர்கள் குழு, கண்டாச்சிபுரம் திருச்சிற்றம்பலமுடையான் திருவாசகம் முற்றோதல் ஓதுவார் குழு என ஏராளமான சிவனடியார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேல்வியை மாலை 5:00 மணி வரை இடைவிடாது நிகழ்த்தினர்.