அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிள்ளையார்பட்டியில் இருந்து புனித நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2023 12:12
தேவகோட்டை; அயோத்தியில் ராமர் கோயில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் ஜன. 21 ல் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதன் காரணமாக இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் தேவகோட்டை மீனாட்சி சுாந்தரேஸ்வரர் கோயில் முன்பு வேலி அமைக்கப்பட்டு சுவாமி தெப்ப உற்சவம் நடக்கும் ஊரணியில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டது. முன்னதாக கருப்புக்குருக்கள் ஊரணிக்கு பல சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் புனித நீர் சேகரிப்பு பணி நடந்தது. தேவகோட்டை சிவன் கோயில் புனித நீர் சேகரித்து நாளை பிள்ளையார்பட்டியில் சேகரிக்கும் தண்ணீருடன் அயோத்தி கொண்டு செல்லபட உள்ளது. நிகழ்ச்சியில் இந்து முன்னணி பொது செயலாளர் மாரியப்பன், பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய கணேசன் நகர செயலாளர் செல்லப்பாண்டியன், பாலன் மதிவாணன், நாகராஜ் பங்கேற்றனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.