திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர், பைரவர் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது.
இக்கோயிலில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் சிதம்பரவிநாயகருக்கும் பைரவருக்கும் பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல திரவியஙகளால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகரும் பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் ஆன்மீகச் சொற்பொழிவு நடந்தது. கவிஞர் அரு.நாகப்பன் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், கவிஞர் வ.தேனப்பன், தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஜோதிடர் சிவல்புரிசிங்காரம், டாக்டர்.சரஸ்வதிநாகப்பன் பங்கேற்றனர். வழங்கினர். முன்னதாக அரிபுரம் குணாளன் வரவேற்றார். ஆறுமுகம் நன்றி கூறினார்.