பதிவு செய்த நாள்
20
அக்
2012
11:10
திருவேங்கடம்: வயலி உடையநாயகி அம்பிகை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வரும் 25ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. சங்கரன்கோவில் தாலுகா வயலி உடையநாயகி அம்பிகை கோயில் மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. வரும் 25ம் தேதி துவங்கும் விழாவில் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை வாஸ்து சாந்தி, மிருத்சங்கரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாஹர்ஷணம், யாகசாலை பிரவேசம், திரவியாகுதி, வேத திருமுறைபாராயணம், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல், யந்திரம், நவரத்தினம், உலோகம் சாத்துதல், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடக்கிறது. 26ம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், நாடிசந்தனம், மகா பூர்ணாகுதி, 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் யாத்ராதானம், கடம் புறப்பாடு, அம்பாள், விமானம், பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின் அம்பாள் மற்றும் மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை, மண்டலாபிஷேகம் துவக்க வழிபாடு, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பட்டர் சர்வசாதகம் சுரேஷ்பட்டர் தலைமையில் வேத விற்பன்னர்கள் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.