Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாத பெருமாள் கோயிலில் கோயிலில் ... ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் நாள் இரவு உற்சவம்; கோவிந்தா கோஷத்துடன் ரெங்கனை வழிபட்ட பக்தர்கள் ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் நாள் இரவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம்

பதிவு செய்த நாள்

14 டிச
2023
07:12

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் நேற்று துவங்கியது.

பெருமாள் கோயில்களில் டிச., 23 வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்கமாக அத்யயன உற்சவம் எனப்படும் பகல்பத்து துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும் விழாவையொட்டி, பெருமாள் ஏகாந்த சேவையில் தாயார் மண்டபத்தில் காலை 9:00 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பாகவதர்கள் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து திருநெடுந்தாண்டகம் அர்ச்சகர்களால் வாசிக்கப்பட்டது.

பின்னர் பெருமாளுக்கு மகாதீப ஆராதனை நடந்து, ஏகாதசி மண்டபத்தில் பன்னிரு ஆழ்வார்கள் சந்நதியில் தீர்த்தம், சடாரி சேவை சாதிக்கப்பட்டு, காலை 11:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல் தினமும் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்படும். 10 வது நாளான டிச., 22 மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் வீதி உலா வருகிறார். இக்கோயிலில் பெருமாள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் நிலையில், இங்கு வைகுண்ட வாசல் வழியாகவே தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு ஆகும். இதன்படி மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு, சர்வ அலங்காரத்துடன் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று இரவு தொடங்கி 10 நாட்கள் இராப்பத்து உற்சவம் துவங்கி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar