திருக்கனூர்: புதுக்குப்பம் கோவிலில் நவராத்திரி உற்சவத்தில் நேற்றிரவு விளக்கு பூஜை நடந்தது.திருக்கனூர் அடுத்த டி.புதுக்குப்பம் பூங்கோதையம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 15ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகின்றன. விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு 6 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு விளக்கு பூஜை நிகழ்ச்சியும் நடந்தது.இவ்விழாவில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.