Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 990 கி.மீ., பாதயாத்திரையாக சபரிமலை ... சென்னையில் முதல்முறையாக பிரம்மாண்ட மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் சென்னையில் முதல்முறையாக பிரம்மாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா; டிச.,26ல் சந்தனம் படி களைதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா; டிச.,26ல் சந்தனம் படி களைதல்

பதிவு செய்த நாள்

16 டிச
2023
03:12

உத்தரகோசமங்கை; ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ளது உத்தரகோசமங்கை. மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் மற்றும் மரகத நடராஜர் சன்னதி பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற கோயிலாக விளங்குகிறது. உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் நடக்கும் ஆருத்ரா மஹா தரிசன விழா பிரசித்தி பெற்றதாகும். மங்களநாதர் சன்னதி அருகே வடக்கு முகமாக வீட்டிற்கும் பச்சை மரகத நடராஜர் திருமேனியில் வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். வருடத்திற்கு ஒரு முறை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மூலவர் மரகத நடராஜரின் திருமேனியில் இருக்கக்கூடிய சந்தனம் படி களைதல் நடக்கும். வருகிற டிச., 18 அன்று மாலை காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது.

வருகிற டிச., 26 (செவ்வாய்க்கிழமை) காலை 8:00 மணியளவில் மரகத நடராஜரின் திருமேனியில் உள்ள சந்தனம் களையப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக காட்சியளிக்கிறார். பால், பன்னீர், திரவியம், மஞ்சள் பொடி, தேன், மூலிகை பொடி உள்ளிட்ட 32 வகையான அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடக்கிறது. அன்றைய தினம் இரவு 11:00 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்கும். பின்னர் மரகத நடராஜர் சமேத சிவகாமி அம்மனின் திருமேனியில் புதிய சந்தனம் காப்பிடும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் டிச., 27 (புதன்கிழமை) அதிகாலை 4:00 மணியளவில் அருணோதய காலத்தில் புதிய சந்தன காப்பிடப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நடக்க இருக்கின்றது. காலை 10:00 மணியளவில் கல் தேர் மண்டபத்தில் இருந்து கூத்தர் பெருமான் எழுந்தருளி வீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாச சுவாமிக்கு காட்சி கொடுத்து சிறப்பு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவையும் நடக்கிறது. ஆருத்ரா தரிசன விழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar