திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா; பக்தர்கள் சிரமம் தவிர்க்க பல்வேறு நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2023 03:12
காரைக்கால்; திருநள்ளாறில் நாளை 20ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் இரண்டு அரை ஆண்டுக்கு ஒருமுறை மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இந்தாண்டு நாளை 20ம் தேதி புதன்கிழமை மாலை 5.20 மணிக்கு சனீஸ்வரபகவான் மகரராசியிலிருந்து கும்பராசிக்க பிரவேசிக்கிறார். இதனால் கோவில் நிர்வாகம் விழாக்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.மேலும் அரசு வழிகாட்டுதளுடன் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் 50ஆயிரம் தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பிஸ்கட், பேரிச்சை, மற்றும் அன்னதானம், கோவிலை சுற்றி 12 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு மையம், 7இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரம், 4 இடங்களில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் உள்ளது. 6 இடங்களில் அவரசவசதிக்கு ஆம்புலன் சேவை வசதிகள், 7 இடங்களில் தீவிரவாத்தை முறியடிக்கு விதமாக அதிவிரைவு போலீஸ் படையினர் பாதுகாப்பு, 5 இடங்களில் முதல் உதவி சிகிச்சை மையங்கள் உள்ளது. 120 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், 20 இலவச பேருந்துகள் மூலம் பக்தர்கள் செல்லுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் வருவதால் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.