பதிவு செய்த நாள்
22
அக்
2012
09:10
பழநி: பழநியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடக்கும் "அம்பு போடுதல் நிகழ்ச்சிக்காக, அக்., 24 மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, கோயில் நடை அடைக்கப்படும்."அம்பு போடுதல் நிகழ்ச்சியில், மலைக்கோயில் மூலவர் சன்னதியில் இருந்து, பகல் 2.30 மணிக்கு, பராசக்திவேல் புறப்பட்டு, படி வழியாக பெரியநாயகியம்மன் கோயிலை அடையும். அங்குள்ள முத்துகுமார சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில், கோதைமங்கலம் கோதிஸ்வரர் கோயிலில், மாலை 6 மணிக்கு எழுந்துஅருள்வர். புலிப்பாணி சிவானந்த பாத்திரசுவாமிகள் அம்பு போட்டு, வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அம்புபோடுதல் நிகழ்ச்சி முடிந்து, பராசக்திவேல் மலைக்கோயிலுக்கும் கொண்டு வரப்படும். நள்ளிரவு 12 மணிக்கு மலைக்கோயிலில், இரவு பூஜை நடக்கும்.அன்று மாலை 3 மணியில் இருந்து, இரவு 12 மணி வரை, கோயில் சன்னதி அடைக்கப்படும்.