பலக்காடு; குசேலர் தினத்தையொட்டி குருவாயூரில் பக்தர்கள் கூட்டம்.. கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ண கோவில். இங்கு நேற்று குசேலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு அவல் வழிபாடு மூலவருக்கு சமர்ப்பித்து தரிசனம் நடத்தினர். பக்தர்களின் அவல் வழிபாடுகள் பெற்றுக்கொள்ள கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தன. கிருஷ்ணர், ராதை மற்றும் குசேலர் வேடமணிந்து தரிசனத்துக்கு ஆலப்புழாவில் இருந்து வந்த பக்தர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தன. குசேலர் தினத்தின் சிறப்பு அவல் வழிபாடு காலை பந்தீரடி பூஜைக்கு பிறகு மூலவருக்கு நிவேதித்தன. பிரசாதம் விநியோகம் நடந்தன. குசேலர் தினத்தையொட்டி கோவில் வளாக மேல்புத்தூர் கலையரங்கில் கலாமண்டலம் நீலகண்டன் நம்பீசன் நினைவுக்காக காலை முதல் கதகளிபத கச்சேரி அரங்கேறின. இரவு சபாபதியின் கதகளி நடன நிகழ்ச்சியும் அரங்கேறின.