தங்க கவசத்தில் அருள் பாலித்த திருநள்ளாறு சனீஸ்வரன்; இன்று முதல் 48 நாள் பரிகார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2023 09:12
காரைக்கால்; புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநாள்ளாறில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். சங்கடம் தீர்க்கும் சனிஸ்வரபகவானை தரிசிக்க நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து தினம் வருகின்றனர்.இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிபெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.நேற்று மாலை 5.20மணிக்கு சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். முன்னதாக அதிகாலை 4மணி முதல் சனிபகவானுக்கு பால்,மஞ்சல், சந்தனம், பன்னீர், நல்லெண்ணை,பழங்கள் உள்ளிட்ட 16வகையான வாசனை திரவியங்களை கொண்ட மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கோஷம் முழுங்க சனிபெயர்ச்சி நேரத்தில் பகவான் தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். சனிபெயர்ச்சி விழா முன்னிட்டு உற்சவர் சனிபகவான் வசந்த மண்டபத்தில் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார். தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனிபகவானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் மாணிக்கவாசகர் புறப்படும் நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், அமைச்சர் சாய்சரவனண். சிவா எம்.எல்.ஏ. கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், கலெக்டர் குலோத்துங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று முதல் 48 நாள் மண்டல பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று பரிகார பூஜைகள் செய்யலாம்.