பெரியகுளம்; பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் நடந்த மகாசக்தி அன்னதானத்தில் எட்டாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் பாலசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 4 ம் தேதி மகாசக்தி அன்னதானம் கோலாகலமாக நடக்கும். கோயில் முழுவதும் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டது. அன்னதானம் 19ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சரணகோஷம் பாடினர். இருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பினர். காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை அன்னதானம் நடந்தது. எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானத்தில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாலசாஸ்தா கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.