மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள்; நாளை சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2023 06:12
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவத்தில் பெருமாள் மோகனி அவதாரத்தில் வீதி வலம் வந்தார்.
பரமக்குடி சவுந்தர வல்லித் தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் டிச., 13 தொடங்கி நடக்கிறது. நிறைவு நாளான இன்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் வீணை ஏந்தி, மோகினி அவதாரத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து 6:00 மணிக்கு கோயிலை அடைந்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்து நடை அடைக்கப்பட்டது. நாளை காலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.