பதிவு செய்த நாள்
24
டிச
2023
09:12
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, மார்கழி வளர்பிறை பிரதோஷ பூஜையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி கோவில் கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்திக்கு, பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, இளநீர் உள்பட பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமச்சிவாய’ என பக்தி கோஷமிட்டும், சிவ வாத்தியங்கள் இசைத்தும் வழிபட்டனர்.