பதிவு செய்த நாள்
22
அக்
2012
10:10
கீழக்கரை: ராமநாதபுரம் அருகே பெரியபட்டணம் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்காவில், மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவையொட்டி, நாளை(அக்.,23) மாலை, கொடியேற்றம் நடக்கிறது. 111வது ஆண்டுவிழா ஊர்வலம், பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளிவாசலிருந்து துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடையும். சிறப்பு "துவாவிற்கு பின், அங்குள்ள 100 அடி கொடி மரத்தில் தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றம் நடைபெறும். தினமும் மவுலீது ஒதப்படும். நவ.,2ல் சந்தனக்கூடு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் செய்யது இபுராகிம்,செயலாளர் ரமலான், விழா ஒருங்கிணைப்பாளர் அப்துல் மஜீது மற்றும் சுல்த்தானிய சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றன.