அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் தெப்பத் தேரில் சுவாமி உலா வந்து அருள் பாலித்தார்.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 24 ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி தேரோட்டம் நடந்தது. இன்று இரவு 7:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் வீற்றிருக்கும் சப்பரம் தெப்பக்குளத்தில் நடுவில் உள்ள மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்தது. திரளான பக்தர்கள் பூக்களை தூவி மன்னீஸ்வரரை வழிபட்டனர். இதையடுத்து மன்னீஸ்வரருக்கு அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.