Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாரில் ஆருத்ரா உற்சவம்; ... மார்கழி திருவாதிரை; கைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மார்கழி திருவாதிரை; கைலாசநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்; நடனமாடி காட்சியளித்த நடராஜர்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்; நடனமாடி காட்சியளித்த நடராஜர்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

27 டிச
2023
05:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஸ்ரீமந் நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான சிவசிவ கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உத்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26ம் தேதி தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தேறியது. நேற்று இரவு தேரில் இருந்து இறங்கிய சுவாமி, இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு, நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடந்தது. பால், தேன், நெய், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 4.00 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் 9.00 மணிக்கு முடிவுற்றது. மகாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசித்தனர்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில்  நடராஜமூர்த்திக்கும். சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றன. சித்தசபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் மாலை 4.20 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். தொடர்ந்து சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து தரிசனம் செய்தனர். நாளை முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar