மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மானாமதுரை ஆனந்த வல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா 21ஆம் தேதி துவங்கியது தினம் தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி இன்று தெற்கு ரத வீதியில் உள்ள பொட்டலில் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் 28ம் தேதி திருக்கல்யாணமும், 29ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 1ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா நடைபெற உள்ளது.