பதிவு செய்த நாள்
26
ஏப்
2026
09:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்றது வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவிலில் சித்திரை பெருவிழா ஏப்., 21 முதல் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
முக்கிய உத்சவமாக, நாளை, காலை, வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியர், திருத்தேர்களில் உலா செல்வர்.
திருக்கழுக்குன்றம் மட்டுமின்றி, மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் திரண்டு, தேர்களை வடம்பிடித்து இழுத்து, கோவிலில் தரிசிப்பர். கடந்த 23ம் தேதி, தேர்தல் நாளில், 63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் விமரிசையாக நடந்தது.