ஸ்ரீரங்கம் இராப்பத்து ஆறாம் நாள்; கனகாம்பர பட்டு அணிந்து நம்பெருமாள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2023 07:12
திருச்சி; ஸ்ரீரங்கம் இராப்பத்து ஆறாம் திருநாளில் ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில் கல் இழைத்த அரை கொண்டை, கீரிடம், பங்குனி உத்திர பதக்கம், அகலகில்லேன் பாசரத்திற்காக திருமார்பு நாச்சியார் பதக்கம், கையில் கோலக்கிளி , நெல்லிக்காய் மாலை, சந்திர வில்லை,6 வட முத்து மாலை, காசு மாலை, ஐம்படை மாலை, அடுக்கு பதக்கங்கள் ,ரத்தின அபய ஹஸ்தம் அணிந்து, கனகாம்பர வண்ண பட்டு அணிந்து நம்பெருமாள் சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.