பதிவு செய்த நாள்
30
டிச
2023
10:12
சின்னாளபட்டி; ஆத்தூர் தொகுதி பா.ஜ., சார்பில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க வேண்டி, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கங்காதரன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தரவு தள மேலாண்மை பிரிவு துணைத் தலைவர் லட்சுமண மணிகண்டன், ஆத்தூர் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். 60 கலசங்கள் அமைத்து, கலச வேண்டி நடந்தது. அயோத்தி கோயில் பிரசாதம், பூஜைக்கு பின் வினியோகம் செய்யப்பட்டது. ஆத்தூர் தொகுதி மண்டல் தலைவர்கள் ராமமூர்த்தி, விக்கேஷ், வீரக்குமார், அயனவேல் தண்டபாணி பங்கேற்றனர்.