புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி துர்க்கையம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்தார். லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி தேவசேனா கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. முதல் நாள் சிவ துர்க்கையம்மன் பாலா திரிபுரசுந்தரி அலங்காரத்திலும், இரண்டாம் நாள் நாராயணி அலங்காரத்திலும், மூன்றாம் நாள் அபிராமியம்மன் அலங்காரத்திலும் காட்சியளித்தார்.நான்காம் நாள் அன்னபூரணி அலங்காரத்திலும், 5ம் நாள் கெஜலட்சுமி, 6ம் நாள் ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம் நாள் காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரத்திலும் காட்சியளித்தார். நேற்று முன்தினம் மகிஷா‹ரமர்த்தினி அலங் காரத்திலும் காட்சியளித்தார். சரஸ்வரதி பூஜையான நேற்று துர்க்கையம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை அறங்காவல்குழு தலைவர் ஆறுமுகம், செயலாளர் பன்னீர்செல்வம், பொரு ளாளர் செல்வராசு, கோவில் அர்ச்சகர்கள் வெங்கடேசன் குருக்கள், ராகவேந்திரர் குருக்கள் செய்திருந்தனர்.