பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
ஈரோடு: ஈரோடு கோட்டை பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, காசிவிசாலாட்சி அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். ஈரோடு கோட்டை, பெரியபாவடியில் ஓங்காளியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, மீனாட்சியம்மன், அபிராமி அம்மன், வைஷ்ணவி, சாமூண்டீஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. ஐந்தாவது நாளையொட்டி செய்யப்பட்ட, தனலட்சுமி அலங்காரத்தில், பத்து லட்சம் ரூபாயில், ஓங்காளியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று, காசிவிசாலாட்சி அலங்காரத்தில், ஓங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, சரஸ்வதி அலங்காரத்திலும், நாளை மகிமாசுரவர்த்தினி அலங்காரத்திலும், அம்மன் அருள்பாலிக்கிறார். கோட்டை ஓங்காளியம்மன் கோவில் கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மலர்அங்கமுத்து, சம்பத்குமார், குப்புராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.