பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
கடலூர்: கடலூர் அடுத்த திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள வாமனபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. கடலூர் அடுத்த திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அம்புஜாக்ஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.இதற்கான யாகசாலை பூஜை இன்று காலை 5 மணிக்கு மகா கணபதி பிரார்த்தனையுடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு சோடஷ மகாலட்சுமி ஹோமம், தனகுபேரபூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்÷ஷாஹன ஹோமம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.நாளை (25ம் சததி) காலை 7.30 மணிக்கு மிருத்சங்கரஹணம், கெடிலம் நதியில் இருந்து தீர்த்த ஆதர்ஷணம், பஞ்சாத்ர ஹோமம், மூர்த்தி ஹோமம் மற்றும் மகா பூர்ணகுதி, தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், முதல்கால யாக பூஜை நடக்கிறது வரும் 28ம் தேதி காலை 5 மணிக்கு ஆறாம்கால யாக பூஜை ஹோமமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 7.30 மணிக்கு பிரதான யாகசாலைகள், பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ திரவ்ய ஹோமங்கள், மகா பூர்ணாகுதியும்; 8.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமான ஸ்தூபிகளுக்கும், 9.30 மணிக்கு மூல ஸ்தான மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.மாலை 4 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண உற்சவமும், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.வீதியுலாவும் நடக்கிறது.