அகிலமே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடக்கிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2024 10:01
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு, 2020 ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய சனாதன கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் இக்கோவில், 2025ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும். இந்நிலையில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி குறித்த விவரங்களை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு கும்பாபிஷேகம் தொடங்கும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கான ஏற்பாடுகளை ராமர் கோயில் அறக்கட்டளை செய்து வருகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) நடந்த பிறகு, ஆரத்தி பூஜை செய்யப்படும். கும்பாபிஷேகத்தைக் குறிக்கும் வகையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு விளக்குகளை ஏற்றி, தங்கள் இருப்பிடங்களில் இருந்து பிரார்த்தனை செய்யுமாறு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளது குறிபடத்தக்கது.