Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி செவ்வாய்; சுப்பிரமணிய ... ராஜகோபால சுவாமி கோவிலில் திருஅத்யன உற்சவம் நிறைவு ராஜகோபால சுவாமி கோவிலில் திருஅத்யன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானபுரீ கோவிலில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ஞானபுரீ கோவிலில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

02 ஜன
2024
02:01

மயிலாடுதுறை; திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்  அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட சேத்ரத்தில் 33 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.  சுவாமி இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளுடன் அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இவர் தன்னை நாடி வரும் பக்தர்களின் சங்கடங்களை நீக்கி, மங்களம் அருள்வதாக ஐதீகம். இக்கோயிலில் இன்று ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் ஜெயந்தி விழா நடைபெற்றது. அதிகாலை ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு, நவக்கிரக, மிருத்யுஞ்சய, ஆயுஷ் ஹோமங்கள் நடத்தப்பட்டன. ஜெயந்தி விழாவை முன்னிட்டு மகா சுவாமிகள் கோவில் வளாகத்தில் வெள்ளி ஆசனத்தில் எழுந்தருள, பக்தர்கள் வாழ்த்து பாடல்கள் பாடினர். அடுத்து மந்திர கோஷம் எழுப்பப்பட்டது, தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட கோவில்களின் பிரசாதங்களை ஆதீன கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் மகா சுவாமிகளிடம் வழங்கினர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு கோவில்களின் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக இலக்கியமேகம் ஸ்ரீனிவாசன் எழுதிய சகடபுரத்தின் வெற்றி விடியல்  புத்தகம் மற்றும் திருமடத்தின் 2024ம் ஆண்டு பஞ்சாங்கம் மகா ஸ்வாமிகள் முன்னிலையில் தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள் வெளியிட்டார். தொடர்ந்து பாகவதர்களின் ராம நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. பின்னர் மகா ஸ்வாமிகள் மூத்த பாகவதர்களை கௌரவித்து, உதவிகளை வழங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி யாக ... மேலும்
 
temple news
சென்னை; தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், வெங்டேஷ்வர பெருமாளுக்கு நாளை பிற்பகல் ... மேலும்
 
temple news
சென்னை: சாத் பூஜையை முன்னிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மெரினா கடற்கரையில் சூரியனுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 70 லட்ச ரூபாய் செலவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar