பதிவு செய்த நாள்
06
ஜன
2024
05:01
பாலக்காடு; பாலக்காடு கோவில்களில் சாஸ்தா ப்ரீதி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் பல்வேறு சாஸ்தா கோவில்களில் சாஸ்தா ப்ரீதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன. நூறணி ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் இன்று காலை மகா கணபதி ஹோமம்,, 7.30க்கு பூர்ணாபிஷேகம், 9.30க்கு செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க உற்சவர் யானை மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலை மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொண்டிகுளம் ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் சாஸ்தா கோவிலில் காலை 6.30 மணிக்கு மகா சன்னியாசம், 7.30க்கு பூர்ணாபிஷேகம், 9.30க்கு செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க உற்சவர் யானை மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடந்தது. 11.30க்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலை மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
கல்ப்பாத்தி ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் காலை மகா கணபதி ஹோமம்,, 7.30க்கு பூர்ணாபிஷேகம், அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடந்தன. 9.30க்கு மங்கள வாத்தியம் முழங்க உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலை மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.