பழநி; பழநி கோயில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் இந்த ஆண்டு ரூ. 29 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
பழநி கோயில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்று உள்ளது இந்நிலையில் கடந்த ஆண்டு விற்பனை ரூ.25 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு புதிதாக விற்பனை மையங்கள் அதிகரித்து 20 இடங்களில் பஞ்சாமிர்தம் பக்தர்கள் பெற்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஜன.5 வரை நடந்த பஞ்சாமிர்த விற்பனை ரூ.29 கோடிக்கு நடந்துள்ளது. சிரமம் இல்லாமல் பக்தர்கள் பஞ்சாமிர்தம் பெற்று செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.