தெக்கூர் கைலாசநாதர் கோவிலில் சிவானந்த மஹோத்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2024 03:01
மானாமதுரை; மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் சிவானந்த மஹோத்சவ திருவிழா மற்றும் மாதாந்திர சுவாதி சிவ ஆராதனை விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால் , பன்னீர்,சந்தனம், இளநீர், மஞ்சள், திரவிய பொடி, தயிர், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டு ஸ்ரீ ருத்ர ஹோமம்,சிவ நாம சங்கீர்த்தனம் ,திரு தொண்ட தொகை பாராயணம் மற்றும் சிறப்பு யாகம் ஆகியவை அர்ச்சகர் முத்து வடுகநாதன் தலைமையில் நடந்தது.இதில் பெரியகோட்டை மற்றும் தெக்கூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.