புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்திக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில், விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 16ம் தேதி நவராத்திரி கொலு துவங்கியது. இந்த உற்சவம் இன்று (24ம் தேதி) வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்திக்கு, சிறப்பு அலங்காரங்கள் செய்தனர். மகாலட்சுமி, வேணுகோபாலன், திருவேங்கடமுடையான், வெண்ணைத்தாழி கண்ணன், வைகுண்ட நாதர் அலங்காரங்களில் ”வாமி அருள்பாலித்தார். சரஸ்வதி அலங்காரம் நேற்று செய்விக்கப்பட்டது. இன்று (24ம் தேதி) மாலை 6 மணிக்கு, விஜயதசமி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.