புதுச்சேரி: புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரே உள்ள சீரடி சாயிபாபா கோவிலில் சீரடி சாயிபாபாவின் மகா சமாதி தினம் மற்றும் 94ம் ஆண்டு ஆராதனை விழா, இன்று 24ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு பல்லக்கு உற்சவம், 12 மணிக்கு ஆரத்தி, அன்ன தானம் நடக்கிறது. 2.15 மணிக்கு சாயி பக்தர்களால் எழுதப்பட்ட சீரடி சாய்பாபாவின் நாமாவளிகள் அர்ப்பணம் செய்யப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு ராஜன், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜன் நடக்கிறது. இத்தகவலை சாயிபாபா சேவா சமிதி பி.ஆர்.ஓ., சாயிராம் தெரிவித்துள்ளார்.