மார்கழி அனுஷம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2024 04:01
கோவை ; கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள மகா சங்கரா மினி ஹாலில், மார்கழி அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு, காஞ்சி மகா பெரியவரின் முப்பதாவது ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மகா பெரியவரின் திரு உருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.