கோவை; கோவையில் ஸ்ரீ சபரிச சேவா சங்கம் சார்பில் 11-வது ஆண்டு விழா மற்றும் சாஸ்தா மகோஸ்தவம் கவுண்டம்பாளையம்- இடையர்பாளையம் ரோட்டில் உள்ள ராஜலட்சுமி ஹாலில் நடந்தது. இதில் ஐயப்பன் திரு உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.