செஞ்சி; செஞ்சி அடுத்த மேலச்சேரி கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத ஸ்ரீ மத்தளேஸ்வரர் கோவிலில் நேற்று உலக நன்மை வேண்டி, ருத்ர ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்தனர். காலை 11 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.